E-CITY AWARD CEREMONY - 2015 - Album

மிகச் சிறப்பாக நடைபெற்ற யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் ஈ-சிற்றி விருதுகள் விழா 2015 யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழா 02.08.2015 அன்று கல்லூரியின் தலைவர் லயன்.ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் மிகச் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றது. மிகச் சிறப்பாக நடைபெற்ற யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் ஈ-சிற்றி விருதுகள் விழா 2015 யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் விருது வழங்கும் விழா 02.08.2015 அன்று கல்லூரியின் தலைவர் லயன்.ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் மிகச் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றது. பாரம்பரிய கலைகளான குதிரையாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம் போன்ற கிராமியக் கலைகளுடன் விருந்தினர்கள், விருதுபெற்றவர்கள், ஆங்கில டிப்ளோமா சான்றிதழ்கள் பெற்றவர்கள் அழைத்துக் கௌரவிக்கப்பட்ட இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் சின்மய மிசன் வதிவிட ஆச்சாரி பிரமச்சாரி ஜாக்ரட் சைத்தான்ய, யாழ்ப்பாணம் கிளிநொச்சி உலாமா சபைத் தலைவர் மௌலவி அஸீஸ் ஹசிமி, வீணாகான குருபீடத்தின் ஸ்தாபகரும் தலைவருமான சிவசிறி சபா வாசுதேவக் குருக்கள், இஸ்லாமிய மதகுருமார்கள் போன்ற சமயத் தலைவர்களும், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் கோபாலக்கிருஸ்ணா ஐயர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்பாணப் பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர்களான திரு.ளT.சிவாஸ்கரன் (Director of MCS College) மற்றும் யாழ்பாணப் பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி.ச.தேவரஞ்சினி அவர்களும் கௌரவ விருந்தினர்களாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் இலங்கை 306 B1 மாவட்டத்தின் இணைப்பாளர்கள் லயன்.தேவாபீற்றர், லயன் சிறிபிரகாஸ், யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் ஆங்கில பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.சுப்பிரமணியம், தீவக கல்வி வலயத்தின் தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.செல்வராஜா, யாழ்பாணக் கல்வி வலயத்தின் தொழில் வழிகாட்டல் அதிகாரி திரு. தர்மானந்தசிவம், ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் பணிப்பாளர், லயன்.டாக்டர்.க.ஜெயச்சந்திரமூர்த்தி(J.P), சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்கடர்.அ.ஜெயக்குமார் மற்றும் அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். ஆங்கில டிப்ளோமா பாடநெறிகளை பூர்த்தி செய்த 180 மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இந்த நிகழ்விலே வழங்கப்பட்ட அதே வேளை சமூகத்திற்கு மிகச் சிறந்த சேவையாற்றிய 8 பேருக்கு விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக இந்து மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் ஆற்றிய உயர்ந்த சேவைக்காக சிவசிறி சபா வாசுதேவக்குருக்கள் அவர்களுக்கு ஆன்மீகப் பேரொளி என்ற கௌரவத்தையும் வடக்கு மாகாண முஸ்லிம் மக்களின் கல்வி, கலை, கலாச்சாரம், மீள்குடியேற்றம் போன்றவற்றிற்கு ஆற்றிய உயர்ந்த சேவைக்காக ஆ~;n~ய்க்.எம்.எஸ்.ஏம்.எம்.முபாரக்(நளீமி டீ.யு) முன்னால் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் அவர்களுக்கு சேவைச் செம்மல் என்ற கௌரவத்தையும் இயல், இசை, நாடகம், கிராமியக் கலை, போன்றவற்றிற்காக ஆற்றிய உயர்ந்த சேவைக்காக திருமதி.புவனேஸ்வரி இரட்ணசிங்கம் அவர்களுக்கு இசைப் பேரொளி என்ற கௌரவத்தையும் இந்து மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் ஆற்றிய உயர்ந்த சேவைக்காக கணபதிப்பிள்ளை சிவநாதன் அவர்களுக்கு சைவத்தின் காவலன் என்ற கௌரவத்தையும் சுதேச, பாரம்பரிய மருத்துவத்துறைக்காக ஆற்றிய உயர்ந்த சேவைக்காக மருத்துவர்.பிலோமினா திருச்செல்வம் அவர்களுக்கு வைத்தியப் பேராசான் வைத்தியாச்சாரி வேலாயுதர் கந்தசாமி ஞாபகார்த்த விருதான வைத்தியப் பேரொளி என்ற கௌரவத்தையும் திரு.நாகப்பு தவநாகமீனேஸ் தமிழர்களின் தொன்மையான கிராமியக் கலைகளுக்கு ஆற்றிய உயரிய சேவைக்காக திரு.நாகப்பு தவநாகமீனேஸ் அவர்களுக்கு கிராமிய கலைக் காவலன் என்ற கௌரவத்தையும் ஈழத்துச் சினிமா, நடிப்பு, திரை இயக்கம், தொழில்நுட்பம் போன்றவற்றிகாக ஆற்றிய உயர்ந்த சேவைக்காக திரு.சிவஞானம் கவிமாறன் அவர்களுக்கு கலை இளவரசன் என்ற கௌரவத்தையும் இயல், இசை, நாடகம், தமிழர் பண்பாடு ஆகியவற்றிற்கு ஆற்றிய உயர்ந்த சேவைக்காக திருமதி.சிவதர்சிகா ஜெயானந்தன் அவர்களுக்கு இசை இளவரசி என்ற கௌரவத்தையும் ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரி வழங்கியது. மேலும் முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த இசைப்பேரொளி திருமதி.புவனேஸ்வரி இரட்ணசிங்களம் அவர்களின் விசேட கர்நாடக சங்கீதக் கச்சேரியும் நடைபெற்றது. மிகப் பிரமாண்டமா நடைபெற்ற இந்த நிகழ்வில் 500 இற்குகும் மேற்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.